Friday, April 30, 2010

சுறா - பாக்கலாம் மக்கா



சுறா வழக்கமான விஜய் படம்தான் இதுவும் ... ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்த படம் எதோ ஒரு வகையில் சற்று பரவாயில்லை .. கண்டிப்பாக இது விஜய் ரசிகர்களுக்கான படம்தான்.. படம் முழுவதும் அவர்தான் , பாட்டு ,டான்ஸ் , சண்டை என பட்டையை கிளப்பி உள்ளார். அவரின் அறிமுக காட்சி கண்டிப்பாக தமிழ் சினிமாவுக்கு ரொம்ப புதுசு, அவர் ரசிகர்களை விசில் அடிக்க வைக்கும் ஆனால் நம்மை தியேட்டரை விட்டு ஓடுவதற்கு முதல் அடியை எடுத்து வைக்க உதவும் ... நல்ல வேலை அதன் பின்னர் அந்த மாதிரியான காட்சி அமைப்புகள் படத்தில் இல்லை, கதை இதுதான் விஜய் ஒரு மீனவ கிராமத்தில் வாழ்கிறார் , வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகர்களை போலவே ஊருக்காக வாழ்கிறார்.. ஊருக்கு நல்லது பண்ணிட்டுதான் நான் சாவேன் என்ற உறுதியுடன் இருக்கிறார்.. ஒரு நாள் கடலில் விழுந்து தற்கொலை பண்ண வரும் தமன்னாவை காப்பாற்றுகிறார் , பின்ன என்ன காதல்தான் , இப்படி போகிற கதையில வில்லன் அமைச்சர் ரூபத்தில் வருகிறார் , அவருக்கு அந்த மீனவ கிராமத்தின் மேல் ஒரு கண், அதை வளைத்து போடா பார்கிறார் ஆனால் விஜய் குறுக்கே நிற்கிறார் , எனவே அவரை கொலை பண்ண முயற்சிக்க அவர் தப்பிவிட , அப்புறம் என்ன விஜய் தன் அழித்தல் வேலையை ஆரம்பித்து விடுகிறார்..

படத்தில் விஜய் மட்டும்தான் அவரை தவிர வேறு யாருக்கும் இடம் இல்லை தனி ஒருவராய் படத்தை தாங்கி பிடிக்கிறார் , தமன்னா ஏன் வருகிறார் என்றே தெரியவில்லை , வடிவேலுவின் காமெடியை விட விஜய் பண்ணும் காமெடிகள் சிரிப்பை வர வைக்கின்றன (நான் அவர் பேசுற பஞ்ச் டயலாக்க சொல்லல) , பாடல்கள் ஒன்றும் பெரிதாய் ஈர்க்கவில்லை , பின்னணி இசை பெரிய குப்பை , ஒளிப்பதிவும் சுமார்தான் , திரைக்கதையும் ரொம்ப ரொம்ப பழசுதான், . படம் பார்க்கும் நமக்கு அடுத்து என்ன நடக்க போகின்றது என்பது தெரிந்து விடுகிறது , ஆனால் நமக்கு கடைசி வரை போர் அடிக்காமல் செல்லும் , கே டீவீயில் பழைய ரஜினி படம் பார்ப்பதை போன்று உள்ளது... படம் சன் பிச்சர்ஸ் படங்களில் இதை விட நாம் பெருசாய் எதுவும் எதிர்பார்த்து விட முடியாது , இப்படிதான் இருக்கும் என்று முன்னரே முடிவு பண்ணிவிட்டு சென்று விட்டால் தலைவலியாவது வராமல் இருக்கும் ...

படம் உடனே பார்க்க வேண்டும் என்ற அளவுக்கு வொர்த் கிடையாது , கொஞ்சநாள் கழித்து டிக்கெட் விலை எல்லாம் குறைந்த பின்னாடிபாத்துக்கோங்க...

சுறா- இன்னொரு வேட்டைக்காரன்

படம் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கும்

(விஜய்க்கு இருக்கும் மாஸ் வர வர குறைந்து கொண்டே வருகிறது இன்று நான் பார்த்த திரை அரங்கில் அம்பது பேர்கூட கிடையாது , அதுவும் பாதி பேர் பொழுத போக வேறு வழி இல்லாமல் இந்த படத்திற்கு வந்ததை போல அமைதியாக உக்காந்து பார்த்தானுக , பத்து விஜய் ரசிகர்கள் மட்டுந்தான் தியேட்டேற்குள்ள, படம் ஆரம்பிச்சி கொஞ்ச நேரத்துக்கு கத்திகிட்டு இருந்தானுக , அப்புறம் அவ்னுகளுக்கே புரிஞ்சி போச்சி , இதுக்கெல்லாம் விசில் அடிச்சா நமக்கு அசிங்கம்னு அடங்கிட்டாணுக)